நுவரெலியா மாவட்டம் நானுஓயா நாவலர் கல்லூரியில் பெயர் பலகை திறப்பு விழா மற்றும் ஆசிரியர் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
குறித்த கல்லூரியின் 2007ம் வருடம் சாதாரண தரத்தில் பயின்ற மாணவர்களால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.கல்லூரியின் அதிபர் நவரத்னராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாடசாலையின் புதிய பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டதோடு,பாடசாலை விளையாட்டு துறைக்கான சீருடை மற்றும் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பும்,நினைவு பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் அரங்கேறியதோடு பாடசாலையின் முன்னாள் ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்