நான்கு அல்ல 40 திருமணம் கூட செய்து கொள்வேன்- சமாளிக்கும் திறன் எனக்கு தெரியும்…….

0
237

நான் நான்கு அல்ல 40 திருமணம் கூட செய்து கொள்வேன் என்று பவர் ஸ்டார் சீனிவாசன் முன்னிலையில் நடிகை வனிதா விஜயகுமார் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில தினங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் வனிதா, பவர்ஸ்டார் உடன் திருமணம் செய்வது போன்ற புகைப்படத்தினை வெளியிட்டார்.

இதனால் வனிதாவிற்கு 4வது திருமணம் நடைபெற இருக்கின்றது என்று நெட்டிசன்கள் மீண்டும் சர்ச்சையினை கிளப்பினர்.

பல சர்ச்சைக்கு பின்பு வனிதா மற்றும் பவர்ஸ்டார் சீனிவாசன் ஆகிய இருவரும் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள் என்றும் அந்த புகைப்படங்கள் தான் இவை என்று தெரியவந்துள்ளது.

பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் வனிதா விஜயகுமார் ஆகிய இருவரும் ’பிக்கப் டிராப்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் பேசிய வனிதா விஜயகுமார் ’தான் அரசியலுக்கு வரவிருப்பதாக தன்னுடைய ஜோதிடர் கூறினார் என்றும் ஆனால் தனக்கு அரசியலில் விருப்பமில்லை என்று தெரிவித்தார்.

மேலும் திருமணம் செய்துகொள்வது தன்னுடைய தனிப்பட்ட உரிமை என்றும் நான்கு அல்ல 40 திருமணம் கூட செய்து கொண்டாலும் அதை சமாளிக்கும் திறனும் அதில் பிரச்சினை ஏற்பட்டால் அச்சப்படாமல் சந்திக்கவும் தனக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here