ஹவாய் தீவில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிமலையான மௌனா லோவா (Mauna Loa) வெடித்துச் சிதறியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
40 ஆண்டுகளின் பின்னர் முதல் முறையாக இந்த எரிமலை வெடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக எரிமலை அமைந்துள்ள பகுதியைச் சுற்றியுள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த எரிமலை வெடிப்பின் காரணமாக சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதியில் சாம்பல் விழும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எரிமலையின் தன்மை வேகமாக மாறக்கூடும் என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் எரிமலையின் நிலை “மிகவும் ஆபத்தானது” எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.