நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கண்டி, பதுளை, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.அத்துடன், எல்ல – நமுனுகுல தொழிற்சாலைப் பிரிவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக, அங்கிருந்து 6 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் தற்காலிகமாக பிங்கராவ தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.