ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பிரசார கூட்டங்களில் கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச கலந்து கொள்வதை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மகிந்த செல்லும் கூட்டங்களில் நாமல் ராஜபக்ஷவின் பிரபலத்தன்மை குறைவடைவதாக தெரியவந்துள்ளது.இதனால் மகிந்தவின் பங்களிப்பை குறைத்து நாமலின் செயற்பாடுகளை அதிகரிக்கும் நோக்கில் மகிந்தவை பிரச்சார கூட்டங்களில் மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மகிந்தவின் பிரபலத்தன்மை மட்டுமே அதிகரிக்கும் என்பதனால் அது நாமலுக்கு பாதகமான சூழலை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாமலின் பிரபலத்தன்மையும் அதிகரிக்க வேண்டும் மகிந்தவின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதனால் இடைக்கிடையே மகிந்தவை மேடைக்கு எற்றி உரையாற்ற வைப்பதற்கு பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.