கல்வி துறையாக இருக்கலாம் சுகாதார துறையாக இருக்கலாம்.வேறு எந்த துறையாகவும் இருக்கலாம் எந்த துறை அபிவிருத்தியாக இருந்தாலும்.அது இன்றைய சிறுவர்களின் நாளைய எதிர்காலத்திற்கே என்பதனை எவரும் மறந்து விடக்கூடாது என ஹட்டன் கல்வி வலயத்தின் வலய கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
லிட்டில் ஏஞ்சல் பாலர் பாடசாலையின் ஏற்பாட்டில் சர்வதேச தந்தையர் தினம் மிக சிறப்பாக பொகவந்தலா கதிரேசன் மண்டபத்தில் நேற்று (19) நடைபெற்றது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இன்று இந்த தந்தையர் தினத்தில் உங்களுடைய பிள்ளைகளின் திறமைகளை கண்டு களித்துக்கொண்டிருக்கிறோம்.ஆனால் இந்த பிள்ளைகள் எதிர்காலத்தில் எவ்வாறானவர்களாக வர என்று உங்களிடம் பல்வேறு எண்ணங்கள் இருக்கலாம். ஆனால் அதற்கு பெற்றோர்கள் என்ற வகையில் நாம் என்ன செய்திருக்கிறோம் என்று சிந்தித்து பார்க்க வேண்டும் பிள்ளைகளை துன்புறுத்தி அவர்களுக்கு அழுத்தங்களை பிரயோகித்து அவர்களை நெறிப்படுத்த முடியாது. ஆனால் நாம் முன்மாதிரியாக நடந்து கொள்வதன் மூலம் தான் உங்கள் பிள்ளை தானாக நற்பிரஜையாக மாறும் உங்கள் தந்தையை தாயை நீங்கள் கவனித்தால் தான் பிள்ளைகள் நாளை உங்களை கவனிப்பார்கள் உங்கள் நடத்தைகளை பார்த்து நடந்து கொள்வார்கள்.
நாம் எவ்வாறு சமூகத்திற்கு முன்மாதிரியாக இருக்கின்றோமோ அதே போன்று தான் உங்கள் பிள்ளையும் மாறும் நல்ல விடயங்களை மேற்கொண்டால் அந்த குழந்தை நல்ல குழந்தையாக வளரும் என்பது மறந்து விடக்கூடாது இன்று உங்கள் குழந்தைகள் தான் நாளை வைத்தியர்களாகவோ,பொறியியலாளர்களாகவோ சட்டத்தரணிகளாகவோ வர வேண்டும் அதற்கு எம்மிடம் என்ன வேலைத்திட்டம் உள்ளது என்று சிந்தித்து பார்;க்க வேண்டும்.அவ்வாறு எல்லா பிரதேசங்களிலும் குறிப்பாக பொகவந்தலா,மஸ்கெலியா உள்ளிட்ட பல கஸ்ட்டமான பிரதேசங்களில் பாடசாலைகள் வளரச்சி பெற்றால் தான் மலையகம் மாற்றம் பெறும் அதற்காக ஹட்டன் கல்வி வலயம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செயப்பட்டு வருகிறது.குறிப்பாக எதிர்காலத்தில் மூன்று மொழியுடன் கொரிய மொழியோ,அல்லது ஜப்பானி மொழியோ ஜெர்மன் மொழியே கற்க வேண்டி தேவை உள்ளது.
அதுவே ஜனாதிபதியின் எதிர்ப்பார்ப்பம் ஆகவே லிட்டில் ஏஞசல் பாலர் பாடசாலை எதிர்கால தேவையினை கருத்தில் கொண்டு சிறு வயது முதல் மும்மொழியுடன் ஏதாவது ஒரு மொழியினை கற்பிக்க வேண்டும் என இப்போது ஆலோசனை முன்வைக்கிறேன் என அவர் இதன் போது தெரிவித்தார்;
சர்வதேச தந்தையர் தினத்தினை முன்னிட்டு நாடாளவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. பொகவந்தலா லிட்டில் ஏஞ்சல் பாலர் பாடசாலை தந்தையர் தின நிகழ்வு நேற்று பொகவந்தலா நகரத்தில் தந்தையர்கள் தாய் பிள்ளைகள் அனைவரும் ஒன்றிணைந்து பேண்ட் வாத்தியம் இசை முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பொகவந்தலா பொலிஸ் நிலையம் வரை சென்று கதிரேசன் மண்டபத்தை வந்தடைந்தது.
அதனை தொடர்ந்து தந்தையின் பெருமையினை பறைசாற்றும் கவிதை,சித்திரம்,பாடல் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய கண்காட்சி ஒன்று இடம்பெற்றது. குறித்த கண்காட்சிக்கு பொகவந்தலா பிரதேச பாடசாலை மாணவர்களின் ஆக்கங்கள் வைக்கப்பட்டிருந்ததுடன் சிறந்த ஆக்கங்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டதுடன் பிரதேசத்தில் சாதனையாளர்களாக உள்ள பெற்றோர்களும் இதன் போது கௌரவிக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் லிட்டில் ஏஞசல் சிறுவர் பாடசாலையின் பணிப்பாளர் ஜே. என்டன் செங்கோல் அதிபர் திரேசா என்டன் செங்கோல் உட்பட பிரதேசத்தின் அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மலைவாஞ்ஞன்




