நாவலப்பிட்டி பிரதேச மக்களுக்குக் கடந்த மூன்று மாத காலமாக மண்ணெண்ணெயைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
நாவலப்பட்டி நகரில் உள்ள மூன்று எரிபொருள் நிலையங்களில் ஒரு எரிபொருள் நிலையத்தில் மாத்திரமே மண்ணெண்ணெய் விநியோகிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனினும் கடந்த மூன்று மாத காலமாக குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படுவதில்லை என்று நாவலப்பிட்டி பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மண்ணெண்ணையைப் பெற்றுக் கொள்வதற்கு அட்டன் நகருக்குச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக நாவலப்பட்டி பிரதேச மண்ணெண்ணெய் பாவனையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
எனவே இவ்விடயம் குறித்து பொறுப்பு வாய்ந்த தரப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.