நாவலப்பிட்டியில் குடியிருப்பு தொகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் இரண்டு குடியிருப்பு முற்றிலும் சேதம்!!

0
167

நாவலப்பிட்டி நகரசபைக்கு சொந்தமான குடியிருப்பு தொகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் இரண்டு குடியிருப்புகள் சேதமாகியதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி நகரசபை செய்சாகலை பகுதியிலே இன்றையதினம்(02.04.2018) திங்கட்கிழமை காலைவேளையில் தீ குடியிருப்பில் பரவியுள்ளது.

தீ பரவலையடுத்து விரைந்து செயற்பட்ட அயலவர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போதிலும் ஒரு குடியிருப்பு முற்றாக சேதமாகியுள்ளதுடன் உடைமைகள் முழுவதும் தீயில் நாசமாகியுள்ளதுடன் மேலும் ஒரு குடியிருப்பு பகுதியவில் சேதமாகியுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டியில் தீ விபத்து : இரண்டு குடியிருப்புகள் சேதம்!நாவலப்பிட்டியில் தீ விபத்து : இரண்டு குடியிருப்புகள் சேதம்!

தீ விபத்தில் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை என்றும் மின் ஒழுகே தீ பரவலுக்கான காரணமாக இருக்கலாம் என தெரிவித்ததுடன் மேலதிக விசாரணை தொடர்வதாகவும் நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

 

மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here