அனைத்தையும் சாட்சியாகப் பார்க்கத் தொடங்கினால் இந்த புத்தாண்டு உங்களுக்கு ஒரு புதிய பிறவியாக அமையும் என்று சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியான நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு செய்தியாக நித்தியானந்தா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
“இந்த 2026ஆம் ஆண்டில் நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். சாட்சி பாவம். அனைத்தையும் சாட்சியாகப் பார்க்கத் தொடங்கினால் இந்த புத்தாண்டு உங்களுக்கு ஒரு புதிய பிறவியாக அமையும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பதிவின் முடிவில் “பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பல பாலியல் குற்றச்சாட்டுக்களிலும் சிக்கி உலகளவில் பேசப்படும் இவர், இந்திய பொலிஸாரால் தேடப்பட்டு வரும் நிலையில், இந்தியாவிலிருந்து வெளியேறி, கைலாசா என்ற தீவை உருவாக்கி, அங்கு தனது சீடர்களுடன் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் இறந்துவிட்டதாக செய்திகள் பரவியபோதும் அதை அவரும் அவரது சீடர்களும் மறுத்துவந்ததோடு, நித்யானந்தா உரையாற்றுவது போன்ற பல காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.
இந்நிலையிலேயே தற்போது நித்யானந்தா புத்தாண்டு செய்தியொன்றை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.




