வைரஸ் நாட்டிற்குள் நுழைந்தால், அது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க சுகாதாரத் துறை தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது.
வைத்தியசாலை இயக்குநர் வைத்தியர் ஜி.வீரசூரிய, இந்த வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் எவரும் இதுவரை நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் பதிவாகவில்லை எனக் குறிப்பிட்டார்.
வைரஸ் நாட்டிற்குள் நுழைந்தால், அது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க சுகாதாரத் துறை தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
எனவே, சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு வருவதற்கு மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என வைத்தியர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து இந்தியா முழுவதும் இந்த வைரஸ் தொடர்பிலான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருவதுடன், தமிழ்நாடு உட்பட கேரளாவுக்கு அண்டைய மாநிலங்களில் எல்லை மற்றும் சுகாதார பாதுகாப்புகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கைக்குள் நிபா வைரஸ் பரவாதிருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.