நிமிஷாவின் மரண தண்டனை ‘ரத்து’!

0
8

ஏமன் நாட்டில் கேரள மாநில செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேரளா​வின் இஸ்​லாமிய மதத் தலை​வர் அபுபக்​கர் முஸ்​லி​யாரின் ‘கிராண்ட் முப்தி’ அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

செவிலியர் நிமிஷா பிரியா விவகாரத்தில் அபுபக்​கர் முஸ்​லி​யார் மத்​தி​யஸ்​தம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், இந்திய அரசு தரப்பில் நிமிஷாவின் விவகாரத்தை கவனித்து வரும் அதிகாரிகள், மரண தண்டனை ரத்து குறித்து இன்னும் உறுதி செய்யவில்லை.

அபுபக்​கர் முஸ்​லி​யார் கோரிக்கையை ஏற்று ஏமன் நாட்டை சேர்ந்த மதகுரு ஹபீப் உமர் பின் ஹபீஸ், நிமிஷாவின் விவகாரத்தில் இரு தரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தவும், தண்டனையை பரிசீலிக்கவும் வல்லுநர் குழுவை அமைத்தார். இந்த பேச்சுவார்த்தை மற்றும் தண்டனை பரிசீலனையில் ஏற்பட்ட இறுதி உடன்பாட்டின்படி நிமிஷாவின் மரண தண்டனை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஏமனின் சமூக செயற்பாட்டாளர் சர்ஹான் ஷம்சான் அல் விஸ்வாபி தனது சமூக வலைதள பதிவு மூலம் உறுதி செய்துள்ளார். இவர் கொல்லப்பட்ட தலால் அப்​தோ மெஹ்​திக்கு நீதி வேண்டும் கவுன்சிலின் செய்தித்தொடர்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“மத குருமார்களின் வலுவான தலையீடு காரணமாக நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்போது நிமிஷா சிறையில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். அப்படி இல்லையென்றால் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருக்க வேண்டும்” என சர்ஹான் ஷம்சான் அல் விஸ்வாபி கூறியுள்ளார்.

முன்னதாக, தலால் அப்​தோ மெஹ்​தியின் குடும்பத்தினர், நிமிஷாவுக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என அண்மையில் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

– ஏமன் நாட்டில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்ட நிலையில், சிறையில் உள்ள நிமிஷாவுக்கு முன் இப்போது இருப்பது இரண்டே இரண்டு வாய்ப்புகள்தான். குருதிப் பணம் என சொல்லப்படும் ‘தியா’ பணத்தை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இழப்பீடாக பெற்றுக் கொண்டால் நிமிஷா சிறையில் இருந்து வெளியில் வரலாம். அந்தக் குடும்பத்தினர் ஏற்க மறுக்கும் பட்சத்தில் அவர் சிறையில் இருக்க வேண்டும் என இந்த விவகாரத்தை நன்கு அறிந்த வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

கேரளா​வின் பாலக்​காட்டை சேர்ந்​தவர் நிமிஷா பிரியா (38). இவர் கடந்த 2008-ம் ஆண்டு ஏமன் தலைநகர் சனா​வில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் செவிலிய​ராக பணி​யில் சேர்ந்​தார். கடந்த 2015-ல் அரசு செவிலியர் பணியை ராஜி​னாமா செய்த நிமிஷா, ஏமனை சேர்ந்த ஜவுளி வியா​பாரி தலால் அய்டோ மெஹ்​தி​யுடன் இணைந்து அங்கு புதிய மருத்​து​வ​மனையை தொடங்​கி​னார்.

கருத்து வேறு​பாடு காரண​மாக கடந்த 2017-ம் ஆண்டு மெஹ்​திக்​கு, நிமிஷா மயக்க ஊசி மருந்தை செலுத்​தி​னார். இதில் அவர் உயிரிழந்​தார். இந்த வழக்கை விசா​ரித்த சனா நகர நீதி​மன்​றம் கடந்த 2020-ல் நிமிஷாவுக்கு மரண தண்​டனை விதித்​தது. இதை ஏமன் உச்ச நீதி​மன்​றம் உறுதி செய்​தது. இதையடுத்​து, ஜூலை 16-ம் திகதி நிமிஷாவுக்கு மரண தண்​டனை நிறைவேற்​றப்​படும் என்று ஏமன் அரசு அறி​வித்​திருந்​தது.

சட்​டரீ​தி​யான முயற்​சிகள் தோல்வி அடைந்த நிலை​யில், மெஹ்தி குடும்​பத்​தினருக்கு ரூ.8.6 கோடி குரு​திப் பணம் அளித்து நிமிஷாவை மீட்க அவரது குடும்​பத்​தினர் தீவிர முயற்​சிகளை மேற்​கொண்டு வருகின்றனர். இதற்கு தேவை​யான உதவி​களை மத்​திய அரசு வழங்கி வரு​கிறது. இதனிடையே, நிமிஷா​வின் மரண தண்​டனையை தள்​ளிவைக்​கு​மாறு மத்​திய அரசு சார்​பில் ஏமன் அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்​டது.

இந்த விவ​காரத்​தில் ஏமனின் நட்பு நாடான ஈரான் மூல​மாக​வும் மத்​திய அரசு அழுத்​தம் கொடுத்​தது. கேரளாவை சேர்ந்த முஸ்​லிம் மத தலை​வர் கிராண்ட் முப்தி ஏ.பி.அபுபக்​கர் முஸ்​லி​யாரும் மத்தியஸ்தத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இந்தப் பின்னணியில் நிமிஷா பிரி​யா​வின் மரண தண்​டனை தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here