நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!!

0
150

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி , களுத்துறை , கேகாலை , இரத்தினபுரி , நுவரெலியா , பதுளை , காலி , குருணாகலை மற்றும் கொழும்பு மாவட்டங்களுக்கு அந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டது.

அதேபோல் , அம்பலாங்கொடை பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் குறித்த வீடு கடுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மண் மேடு சரிந்து விழும் போது குறித்த வீட்டினுள் மூன்று பேர் இருந்துள்ள நிலையில் , அவர்கள் உயிர் பிழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை , பொல்பிட்டியில் இருந்து அதுருகிரிய வரையிலான மின் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக துல்ஹிரிய , ரம்புக்கனை , கேகாலை பிரதேசங்களில் தற்போது மின்சார தடை ஏற்பட்டுள்ளது.

அதேபோல் , நிலவும் சீரற்ற காலநிலையால் மரத்தின் கிளையொன்று உடைந்து வீழ்ந்ததன் காரணமாக குருணாகலை , மதுகம , ஹொரணை மற்றும் அகலவத்த பிரதேசங்களிலும் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here