இரத்தினபுரி நிவிதிகலை வலயம் நி/தேல தமிழ் ஆரம்ப பாடசாலையில் தரம் 5ல் கல்வி கற்ற செல்வராஜ் சரோஜினி என்ற மாணவி காணாமல் போயுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை பாடசாலை விட்டு வீடு திரும்பும் போது மாணவியின் வீட்டுக்கருகில் அண்மையில் வந்து குடியேறிய இனம் தெரியாத ஒருவரே மாணவியை கடத்தியுள்ளதாக நம்பப்படுகிறது.
மாணவியின் தாயார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறியே குறித்த சந்தேக நபரால் மாணவி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை செய்து வருகின்றனர்,இது தொடர்பில் அமைச்சர் கௌரவ மனோ கணேசனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதோடு அவர் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்ததை தொடர்ந்து விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
நன்றி- சந்துரு குமார்.