நிஷாந்த உலுகேதென்னவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

0
26

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்னவை 24 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடற்படை புலனாய்வு பணிப்பாளராக இருந்த காலத்தில் பொத்துஹெர பகுதியில் நடந்த ஒரு கடத்தல் தொடர்பான விசாரணை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் ஜூலை 28ஆம் திகதி முன்னாள் கடற்படைத் தளபதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, முன்னாள் கடற்படைத் தளபதி ஜூலை 28ஆம் திகதி பொல்கஹவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், சந்தேக நபரை ஜூலை 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here