மல்வத்து ஓயாவில் நீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் மடு மாதா தேவாலயத்துக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பும்போது மல்வத்து ஓயாவுக்கு நீராடச் சென்றுள்ளார்.
இளைஞன் அவரது உறவினர்களுடன் சேர்ந்து நீராடிக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று (14) உயிரிழந்துள்ளார்.
ஜா – எல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான இளைஞனே உயிரிழந்தவராவார்.
சம்பவம் தொடர்பில் தந்திரமலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.