நீர்க் கட்டணத்தைக் குறைக்க முடியும்;ஜீவன்

0
95

மின்சாரக் கட்டணக் குறைப்புக்கு அமைவாக நீர்க் கட்டணத்தைக் குறைக்கும் வகையில் நீர் கட்டணச் சூத்திரமொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்து விலைச் சூத்திரம் வகுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது, ​​மின் கட்டணம் அடுத்த மாதம் குறைக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும், நீர் விநியோகச் செலவு குறைவதால், அதற்கேற்ப நீர்க் கட்டணத்தையும் குறைக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மின்சாரக் கட்டணம் 66 வீதத்தால் அதிகரிக்கப்பட்ட போது நீர்க் கட்டணம் அதிகரிக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், மின்சாரக் கட்டணம் 50 வீதத்தால் குறைக்கப்படும் போது கணிசமான அளவு நீர்க் கட்டணத்தைக் குறைக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here