மலையகத்தில் பெய்யும் கடும் மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் நீா்மட்டம் உயா்ந்துள்ளது. இதனால் அதன் அண்மையில் உள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதிக மழை காரணமாக டெவோன் நீர்வீழ்ச்சியிலும், சென்.கிளயார் நீர்வீழ்ச்சியிலும் நீரின் மட்டம் அதிகரித்துள்ளது.
அத்தோடு விமேலசுரேந்திர நீர்தேக்கத்தின் மேலதிக நீா் வெளியாகுவதோடு, லக்ஷபான நீர்தேக்கத்தின் வான்கதவு ஒன்று திறந்து விடப்பட்டுள்ளது. அட்டன் கொழும்பு பிரதான வீதியிலும், அட்டன் நுவரெலியா பிரதான வீதியிலும் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் இவ்வீதி வழுக்குவதற்கு அபாயம் இருப்பதாகவும் இதனால் வாகனசாரதிகளை அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் கேட்டுகொள்கின்றனர்.
(க.கிஷாந்தன்)