நேற்று நுவரெலிய பிரதேச சபையின் அமர்வு சபை தலைவர் கௌரவ.வேலு யோகராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றன.இன்றைய அமர்வில் கடந்த காலத்தில் பிரதேச சபையூடாக இடம்பெற்ற செயற்திட்டகள்,சேவைகள் என்பவற்றினை வரும்காலங்களிள் மேலும் சிறப்பாக எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பாக சபை தலைவர் கௌரவ.வே.யோகராஜ் அவர்கள் ஊடாக கலந்துரையாடப்பட்டது.
இது தொடர்பாக எதிர்தரப்பினரும் திருப்திகரமான கருத்துக்கள் ஆலோசணைகளை முன்வைத்ததோடு சபை தலைவரின் செயற்பாடுகள் வழிநடத்தல்கள் தொடர்பாக அனைத்து உறுப்பினர்களும் ஏகமனதான பாராட்டுகளையும் தெரிவித்தனர்.