தேசிய தமிழ் மொழித்தினத்தினை முன்னிட்டு நாட்டிலுள்ள கல்வி வலயங்களில் தமிழ் மொழித்தின போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந் நிலையில் நுவரெலியா கல்வி வலயத்தில் தமிழ் மொழித்தின இறுதிப்போட்டிகள் நேற்று (13) கொட்டகலை தேசிய கல்லூரியில் நடைபெற்றது. குறித்த நிகழ்வில் தமிழ் மொழிக்கு சேவையாற்றி உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஸ்டிக்கப்பட்டதுடன் நுவரெலியாவில் மொழிக்காக சேவையாற்றிய பலர் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் குழு நிகழ்ச்சிகள் மற்றும் குழு நடனம் தனி நடனம் ஆகிய போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. குறித்த நிகழ்வுக்கு நுவரெலியா கல்வி வலயத்தின் உதவிக் கல்விப்பணிப்பாளர்களான .கணேசராஜ் கிருபாகரண் திருமதி சர்மா மற்றும் அதிபர்கள் ஆசிரியர்கள் பாடசாலை மாணவர்கள் என ஆசிரிய ஆலோசகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
மலைவாஞ்ஞன்