நுவரெலியா பிரதேச சபையின் வருடாந்த வேலைத்திட்டத்தின் கீழ் “கல்விக்கு கரம் கொடுப்போம்”.

0
191

என்ற எண்ணக்கருவுக்கு அமைய நுவரெலியா பிரதேச சபை மற்றும் மாநகர சபை எல்லைக்குட்பட்ட தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான உயர்தர பாடசாலைகள் அனைத்திற்கும் மாதிரி வினாத்தாள்கள் அச்சிட்டு வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்று 16 நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் அவர்களின் தலைமையில் கந்தப்பளை மெதடிஸ்த கல்லூரியில் (தேசிய பாடசாலை) முதற்கட்டமாக இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன் போது கா.பொ.த உயர்த்தரத்தில் உள்ள அனைத்து பாடங்களுக்குமான வினாத்தாள்கள் உரிய பிரிவில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நுவரெலியா பிரதேச சபையின் செயலாளர், கல்லூரியின் அதிபர் ஓம்பிரகாஷ், பாடசாலையின் ஆசிரியர் குழாம் மற்றும் நுவரெலியா பிரதேச சபையின் உத்தியோகஸ்தர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

டி.சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here