நுவரெலியா மாவட்டத்தில், 17ஆவது கொரோனா மரணம் நேற்று பதிவாகியுள்ளது.

0
186

இராகலை பொது சுகாதார பிரிவுக்கு உட்பட்ட சமஹிபுர கிராமத்தில், 68 வயதுடைய பெண் ஒருவர், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டது.

இந்நிலையில் அப்பெண் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார் என்று, இராகலை பிரதேச பொது சுகாதார பரிசோதகர் ஆர்.எம்.கருணாரத்ன தெரிவித்தார்.

இப்பெண்ணின் மரணத்தோடு இராகலை பொது சுகாதார பிரதேசத்தில் மூன்றாவது மரணம் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் இராகலை பொது சுகாதார பரிசோதகர் பிரிவில், கடந்த (08)ஆம் திகதி மாத்திரம் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும் இவர்களுடன் தொடர்பைப் பேணிய 38 குடும்பங்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

டி சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here