நுவரெலியா மாவட்டத்தில் கொவிட் தொற்றாளர்கள் மிகவும் அதிகரித்து வருகின்ற நிலையில் கொவிட் தொற்றாளர்கள் பராமறிப்பத்தில் பாகுபாடு நிலவிவருவதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளருமான பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.இன்று (17) ஹட்டன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் கிளை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்….
நுவரெலியா மாவட்டத்தில் இன்று நாளுக்கு நாள் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன ஆனால் நுவரெலியா மாவட்டத்தில் ஒரே ஒரு பிசிஆர் இயந்திரம் தான் உள்ளது. அதுவும் அடிக்கடி பழுதடைந்து விடுகின்றது. இதனால் பெரும் எண்ணிக்கையிலான கொவிட் தொற்றாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் இன்று இலங்கைக்கு வெளிநாடுகளிலிருந்து பெரும் தொகையான பணமும் பிசிஆர் இயந்திரம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளன. அதனை அத்தியவசிய தேவையாக உள்ள நுவரெலியா மாவட்டத்திற்கு கொடுக்காமல் பெரும்பான்மை வாழுகின்ற பிசிஆர் உள்ள வசதிகள் காணப்படுகின்ற வைத்தியசாலைக்கு கொடுக்கப்பட்டு தற்போது ஆளுநர் கடிதம் ஒன்று அனுப்பியிருக்கிறார், பிரதேச சபைகள், நகர சபைகள் இணைந்து காசு சேகரித்து பிசிஆர் இயந்திரம் ஒன்றினை கொள்வனவு செய்யுமாறு. அப்படி என்றால் மிகவும் தேவையாக இருக்கின்ற நுவரெலியா மாவட்டத்திற்கு அந்த பிசிஆர் இயந்திரத்தினை ஏன் கொடுக்க முடியாது அது மாத்திரமன்று இன்று ஏனைய பெருபான்மையான பிரதேசங்களில் முறையாக பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் மேற்கொண்டு தடுப்பூசிகளும் வழங்கப்படுகின்றன. ஆனால் மலையகப்பகுதியில் அவ்வாறான ஒரு செயப்பாடு நிகழ்வதில்லை அது மட்டுமல்லாது மருந்துகளின் தட்டுப்பாடும் நிலவுகின்றன.
அதே நேரம் இன்று இந்தியாவில் பாரிய அளிவில் ஒட்சிசன் தட்டுப்பாடு நிலவுகின்றன். இது எமது நாட்டிக்கும் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இந்நிலையில் அரசாங்கம் தனியாருக்கு மரங்களை வெட்டுவதற்கு அனுமதித்துள்ளன இது மிகவும் ஆபத்தான நிலைமையாகும். காரணம் இங்கு ஒட்சிசன் தட்டுப்பாடு ஏற்படும் எனவே அரசாங்கம் மரங்களை வெட்டுவதனை உடன் நிறுத்த வேண்டும். அத்தோடு கொவிட் கட்டுப்படுத்துவதற்கென பெருமளவான நிதி கிடைத்துள்ள போதிலும் அதில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது எனவே இது குறித்தும் அரசாங்கம் கவனமெடுத்து ஆணைக்குழு ஒன்றினை அமைத்து அராய வேண்டும் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.
கே.சுந்தரலிங்கம்