நுவரெலியாவில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு பெரண்டினா நிறுவனத்தால் நிதியுதவி.

0
213

நுவரெலியா மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப பெரண்டினா நிறுவனத்தின் ஊடாக எட்டு கோடியே எழுபத்தி இரண்டு இலட்சத்து எண்பதாயிரம் ரூபா வழங்கி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்தவரிசையில் நுவரெலியா மாவட்டத்தில் சுயதொலிலுக்காக ஆயிரத்து என்னூற்றி எழுபது பேருக்கு தலா நான்காயிரம் வழங்கி வைக்கும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நுவரெலியா பெரண்டினா அரசசார்பற்ற நிறுவனத்தின் ஊடாக வருமானம் குறைந்த ஆயிரம் குடும்பங்களுக்கு தலா ஐயாயிரம் ரூபா வீதம் மூன்று மாதங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நுவரெலியா மற்றும் அம்பகமுவ பகுதியில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கே இந்த தொகை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் முதற்கட்டமாக நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தெரிவு செய்யப்பட்ட 250 பேருக்கான கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் நுவரெலியா பிரதேச செயலாளர் விதுர சம்பத், பெரண்டினா நிறுவனத்தின் பணிப்பாளர் ஜகத் கொடகந்த, பிரதி பொது முகாமையாளர் ரஹீம் உட்பட பெரண்டினா நிறுவனத்தின் உறுப்பினர்களும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பெரண்டினா நிறுவனத்தின் பிரதி பொது முகாமையாளர் ரஹீம் தற்பொழுது எமது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பெரும் பொருளாதார பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

எனவே அவர்களின் பொருளாதார தேவைகளை ஒரளவிற்கேனும் நிவர்த்தி செய்யக் கூடியவகையில் எமது நிறுவனம் தெரிவு செய்யப்பட்ட நுவரெலியா மற்றும் அம்பேகமுவ பகுதிகளை சேர்ந்த 1000 குடும்பங்களுக்கு தலா 5000 ரூபா வீதம் மூன்று மாதங்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டு முதற்கட்டமாக 250 பேருக்கு வழங்கி வைக்கப்படுகின்றது.

இதனை தொடர்ந்து ஏனைய 750 பேருக்கும் எமது நிறுவனத்தின் பணியாளர்களால் அடுத்தடுத்த வாரங்களில் அவர்களுக்கு வழங்கி வைக்கப்படவுள்ளது.எங்களுடைய பணியாளார்கள் தெரிவு செய்துள்ள பயனாளிகளை மாவட்ட செயலாளர்,பிரதேச செயலாளர்,கிராம சேவகர்கள் உறுதிப்படுத்திய பின்பே அவர்கள் இந்த திட்டத்திற்கு தெரிவு செய்யப்படுவார்கள்.இந்த திட்டம் ஆரம்ப கட்டமாகவே இந்த கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்படுகின்றன.

இதனை தவிர சுயதொழிலை ஊக்குவிக்கும் முகமாக தெரிவு செய்யப்பட்ட 18070 பேருக்கு 4000 ரூபாவீதமும் வழங்குவதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த தொகையும் மிக விரைவில் வழங்கப்படவுள்ளதுடன் இவை விசேடமாக வருமானம் குறைந்தவர்களுக்கே வழங்கப்படவள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவை தவிர இன்னும் பல வேலைத் திட்டங்களை நுவரெலியா மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறுபவர்களை மையப்படுத்தி செயற்படுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here