நுவரெலியாவில் மரக்கறி வகைகளின் விலையில் வீழ்ச்சி.

0
223

நுவரெலியா மத்திய சந்தையில் மரக்கறி வகைகளின் விலை தற்போது ஓரளவு வீழ்ச்சி கண்டு வருவதாக நுவரெலிய மத்திய சந்தையில் வியாபாரம் செய்யும் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர் .

இதன்படி புதன்கிழமை விலைப்பட்டியலின் படி
ஒரு கிலோ போஞ்சி 600 ரூபாவிலிருந்து 540 ரூபாவாகவும் ,கறி மிளகாய் 600 ரூபாவிலிருந்து 500 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 500 ரூபாவிலிருந்து 380 ரூபாய்க்கும், ஒரு கிலோ கரட் 400 ரூபாவிலிருந்து 360 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒருகிலோ 360 ரூபாவிலிருந்து 300 ரூபாய்க்கும், லீக்ஸ் ஒரு கிலோ 320 ரூபாவிலிருந்து 300 ரூபாய்க்கும், உள்நாட்டு உருளைக் கிழங்கு ஒரு கிலோ 340 ரூபாவிலிருந்து 300 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மரக்கறி கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர் .

மேலும் கடைசி உரிமையாளர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்தனர் எங்களது கஸ்டத்தின் மத்தியில் சில மரக்கறி வகைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றோம். அதிலும் கொள்வனவு செய்வது வருபவர்கள் குறைவாகவே காணப்படுகின்றது. மீதமான மரக்கறி வகைகள் பறித்து குப்பைகளில் வீச வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

குறைந்து விலைக்கு மரக்கறி வகைகளை விற்பனை செய்து வரும் பணத்தில் மின்சார பட்டியல் கட்டணத்தை கட்டுவதா அல்லது வீட்டுச் சுமையை சரி செய்வதா ,கடைக்கூலி கட்டுவதா , கடைசியில் தொழிலிக்கு வருபவர்களுக்கு சம்பளம் வழங்குவதா ? என்ற கேள்வி அனைத்து மரக்கறி வியாபாரிகள் மத்தியில் பாரிய கேள்வியாக காணப்படுகின்றனது என தெரிவிக்கின்றன

டி.சந்ரு செ.திவாகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here