நுவரெலியா மாவட்டத்தில் விவசாயத் துறையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய மாகாண விவசாய அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்கள் 15.6.2018 வெள்ளிக்கிழமை நுவரெலியா நகருக்கு வருகைத்தந்துடன் உயர் மட்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடல் ஒன்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர அவர்களின் தலைமையில்; விவசாயிகளுக்கு ஏற்படும் இயற்கை ரீதியான பாதிப்புகளுக்கு எவ்வாறு உதவிகளை வழங்க முடியும் எதிர்காலத்தில் அவற்றை எவ்வாறு தடுக்கலாம், மற்றும் பல்வேறு வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் கலந்துரையாடப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நுவரெலியா பகுதியில் கிழங்கு, காளான் வளர்ப்பு, ஸ்ரோபரி ஆகியன உற்பத்தி செய்யும் இடங்களுக்கான கல விஜயத்தினையும் மேற்கொண்டனர். இதன்போது விவசாய திணைக்களத்தின் உயர் அதிகாரிகளும் கலந்துக் கொண்டதையும் இங்கு காணலாம்.
தலவாக்கலை பி.கேதீஸ்