இலங்கைக்கு அந்நியச் செலவாணியை கொண்டு வரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாழும் மாவட்டமாக நுவரெலியா மாவட்டம் காணப்படுகின்றது நுவரெலியா மாவட்டத்திலிருந்து கணிசமான அளவு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வாழுகின்றனர்.இவர்கள் தங்களது வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் தொகையும் அதிகரித்து வரும் நிலையில் இன்று தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக கொழும்புக்கு செல்ல வேண்டியுள்ளது இதனால் இரண்டு மூன்று நாட்கள் தொழிலை இழந்து பெரும் தொகை பணமும் செலவாகின்றது ஆகவே இன்றுள்ள பொருளாதார நிலையில் இது மிகவும் கஸ்ட்டமானது எனவே நுவரெலியா மாவட்டத்திலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கிளை காரியாலயம் ஒன்றையாவுது அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரிடோ நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மைக்கல் ஜோக்கிம் நேற்று 29 ம் திகதி ஹட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் அதிக எண்ணிக்கையிலான தேயிலை தோட்டங்களைச் கொண்ட நுவரெலியா மாவட்டம் தேயிலை உற்பத்தியின் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் உருதுணையாக இருக்கிறது.இம் மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில் கொத்மலையில் 111,268 பேர்,ஹங்குராங்கெத்தவில் 97,354 பேர் வலப்பனையில் ,114,550,பேர்,நுவரெலியாவில் 233,40 பேர் அம்பகவமுவில் 226,234 பேர் என மொத்தம் 782,595 பேர் வசிக்கின்றனர்.அண்மைக் காலங்களில் பிரதேச செயலகங்கள் 10 ஆக அதிகரிக்கப்பட்ட போதிலும் தற்போது இம் மாவட்டத்திலுள்ள எல்லா பிரதேச செலகங்களுடன் ஒப்பிடும் போது விகிதாரசார அடிப்படையில் மிகப்பெரிய சனத்தொகையை கொண்டதாக காணப்படுகின்றன.அரச சேவைகள் மக்களை சென்றடைவதில் இது பெரும் தடையாக உள்ளது.கடந்த காலங்களில் 2018 ம் ஆண்டு 211,211 பேரும் 2019 ஆண்டில் 203087 பேரும் 2022 ஆண்டில் 311,056 பேரும் புலம் பெயர்ந்திருப்பதில் இருந்து புலம் பெயர்வு பாரிய அளவில் அதிகரித்துள்ளதை காணலாம்.
இதே விகிதாசாரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் சமீப வருடங்களில் தொழிலாளர்கள் புலம் பெயர்வு கணிசமான அளவு அதிகரித்துள்ளது.இதில் 2022 ம் ஆண்டு 5436 பேர் புலம் பெயர்ந்துள்ளதுடன்,2023 ம் ஆண்டும் இது மேலும் அதிகரித்துள்ள போதிலும்,பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான சேவைகள் பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.ஒவ்வொரு பிரதேச செயலக பகுதியிலும் புலம் பெயர்வு தொடர்பான அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் ஒருவர் மாத்திரம் உள்ளதோடு அந்த உத்தியோகஸ்த்தரால் பெரும் தொகையான மக்களுக்கு சேவை பெற்றுக்கொடுப்பது முடியாத நிலையே காணப்படுகின்றன.இதைவிட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (ளுடுடீகுநு) அலுவலகத்தின் நுவரெலியாவில் இல்லாததாலும் அதற்காக மக்கள் கொழும்பு செல்ல வேண்டிய நிலை காணப்படுவதனால் பெரும் சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
இதனால் பல்லாயிரக்கணக்கான கையொப்பத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் வெள்நாட்டு வேலை வாய்ப்பு பணியகம் ஒன்றினை அமைத்து தருமாறு சம்பந்தப்பட்ட அமைச்சருக்கும் வெளிநாட்டு பணியகத்தின் திட்டமிடல் பிரிவு அதிகாரிகளுக்கும் எழுத்து மூலம் பல வருடங்களாக கோரி வருகின்றனர்.
கடந்த காலங்களில் கொள்கை அளவில் தீர்மானங்கள் எடுக்கப்பட்ட போதிலும் அது இது வரை சாத்தியமாகவில்லை.
இதனால் பரிடோ நிறுவனம் ( Vice of Migrants (VMO) இணைந்து குரல் கொடுத்தன் பயனாக இன்று கிழக்க மாகாணத்திலும் அம்பாறையிலும் கிளை அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன அதற்காக நன்றி தெரிவிக்கும் அதே வேலை இந்த மாவட்டத்திலும் கிளை ஒன்றினை அமைத்து தருமாறு கோரிக்கை விடுக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
மலைவாஞ்ஞன்