முகநூலில் தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பவர்கள் நேரடியாக வந்து விவாதிக்குமாறு இ.தொ.காவின் உப தலைவரும் நுவரெலியா பிரதேச சபை தலைவருமான வேலு யோகராஜ் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக முகநூலில் பலர் தேவையற்ற உண்மைக்கு புறப்பான விடங்களை கொண்டு செல்கின்றனர்.காரணம் சமூகத்தில் தனக்கென உள்ள நற்பெயரை கலங்கப்படுத்தும் வண்ணம் இப்பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.நேர்மையான, உண்மையாக சேவைகளை முன்னெடுத்து வருகின்றமை நுவரெலியா பிரதேச மக்கள் அறிவர் ஆனால் ஒரு சில விஷமிகள் இவ்வாறு பொய் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாக குற்றம் சுமத்துகின்றார்.
மேலும் கடந்த சில நாட்களாக கந்தப்பளை காணி விவகாரம் தொடர்பில் மக்களை தூண்டும் விதத்தில் பல போலி பிரச்சாரங்கள் முன்வைக்கப்படுகின்றது.எதேதோ செய்து அவை பொய்யென ஆகிய பிறகு தற்போது போலி தொலைபேசி உரையாடலை முகநூலில் பரப்பி வருகின்றனர்.மிமிக்கிரி கலைஞர் ஒருவரை வைத்து நன்றாக வடிவமைத்து உள்ளார்கள் இவர்கள் யார்?ஏன் இவ்வாறு அவதூறு பரப்புகிறார்களென காரணம் தெரியவில்லை.ஆனால் இவர்கள் தொடர்பில் தேடியறிந்து விட்டோம்.இவர்கள் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக வேலு யோகராஜ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்து.