நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நோட்டன் பிரிட்ஜ் நகரில் 11/05/2021 செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட பலத்த மழையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.நோட்டன் பிரிட்ஜ் நகரில் எரிபொருள் நிரப்பு. நிலையத்துக்கு அருகிலேயே இம்மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
குறித்த மண்சரிவில் முச்சக்கர வண்டி உட்பட மோட்டார் வண்டியொன்றும் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த்