நோர்வூட் நகரபகுதியில் சேமிக்கபடுகின்ற குப்பைகளை பொகவந்தலாவ பாரதிபுறம் பகுதியில் கொட்டுகின்றமையால் மக்கள் எதிர்ப்பு

0
213

நோர்வூட் பிரதேசசபைக்குட்பட்ட நோர்வூட் நகரபகுதியில் சேமிக்கபடுகின்ற குப்பைகளை பொகவந்தலாவ பாரதிபுறம் பகுதியில் கொட்டுகின்றமையால் பாரதிபுற மக்கள் பெரிதும் பாதிக்கபடுகின்றமை குறித்து 20.09.2018.வெள்ளிகிழமை காலை 10மணி அளவில் குறித்த பகுதியில் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்று இடம் பெற்றதுநோர்வூட் நகரபகுதியில் சேமிக்கபடுகின்ற குப்பைகளை இன்றைய தினம் பொகவந்தலாவ பாரதிபுர பகுதியில் கொண்டு வந்து கொட்டபட்ட வேலையில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை ஏற்பட்டது. குறித்த பொகவந்தலாவ பாரதிபுற பகுதியில் சுமார் 50இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

எனவே வெளிபிரதேசங்களில் உள்ள குப்பைகளை கொண்டு வந்து கொட்டபடுகின்றமையால் அம் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்குவதாக தெரிவிக்கும் பாரதிபுற மக்கள் இந்த குப்பைகளின் ஊடாக கொசு தொல்லை அதிகமாக காணபடுவதாகவும் மலேரியா டெங்கு போன்ற நோய்கள் தொற்றகூடிய வாய்ப்புகள் ஏற்பட கூடுமெனவும் பொகவந்தலாவ பாரதிபுறம் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

கடந்த காலங்களில் பொகவந்தலாவ பிரதேசத்தில் சேகரிக்கபடுகின்ற குப்பைகளை மாத்திரம் கொண்டு வந்து கொட்டபட்டன ஆனால் தற்பொழுது வெளிபிரதேசங்களில் காணபடுகின்ற குப்பைகளை கொண்டு வந்து கொட்டபடுவதாக பாரதிபுறமக்கள் மேலும் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பாக நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர் ரவி குழந்தைவேலை தொடர்பு கொண்டு வினவிய போது நோர்வூட் நகரபகுதியில் உள்ள குப்பைகளை பொகவந்தலாவ பாரதி புறத்தில் கொண்டு வந்து கொட்டபடுவது இல்லை நோர்வூட் நகரபகுதியில் சேமிக்கபடுகின்ற குப்பைகளை மஸ்கெலியா பகுதியில்தான் கொண்டு கொட்டபடுகிறது.

குறித்த பகுதியில் உள்ள குடியிருப்பு என்பது அந்த பகுதியில் குப்பை தொட்டில் உருவாகிய பின்னரே குறித்த பாரதி புறத்தில் குடியிருப்புகள் உருவாகியதாகவும் அவர் தெரிவித்தார். எனவே பொகவந்தலாவ பாரதிபுறத்தில் வெளிபிரதேசங்களில் சேகரிக்கபடுகின்ற குப்பைகளை கொண்டுவந்து கொட்டுவதற்கு நோர்வூட் பிரதேசசபை அனுமதி வழங்க கூடாது என பொகவந்தலாவ பாரதிபுறம் மக்கள் கோறிக்கை விடுக்கின்றனர்.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here