நோர்வூட் நகரில் இருந்து அட்டன் பகுதியை நோக்கி பயணித்த கார் விபத்து
சாரதி கைது – கிழங்கன் பகுதியில் சம்பவம் .
நோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நோர்வூட் நகரில் இருந்து அட்டன் பகுதிக்கு பயணித்த கார்வண்டி ஒன்று கிழங்கன் கெந்தகொலை பகுதியில் 10அடி பள்ளத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர் .
இந்த சம்பவம் 14.02.2018. புதன்கிழமை மாலை 04.30 மணி அளவில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .
குறித்த கார் வண்டியின் சாரதி மது போதையில் இருந்ததாகவும் அதிகவேகத்தின் காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் நோர்வூட் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த கார் வண்டி அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியை விட்டு விலகி கெந்தகொலை பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது குடைசாய்ந்துள்ளதாகவும் குறித்த சாரதி கைது செய்யபட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
எனவே சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட கார் வண்டியின் சாரதி 15.02.2018. வியாழக்கிழமை அட்டன் நீதவான் முன்னிலையில் அஜர்படுத்தபட உள்ளதாக நோர்வூட் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்