நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் நான்கு குடியிருப்புக்கள் காசல்ரீ நீர் தேக்கத்திற்கு அள்ளுண்டு சென்றது
நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் நிலம் தாழ்இறங்கிய சம்பவம் தொடர்பில் நான்கு குடியிருப்புகள் காசல்ரீ நீர் தேக்கத்திற்கு அள்ளுண்டு சென்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 15.10.2018.திங்கள் கிழமை காலை 11.45மணி அளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கடந்த ஒருவாரத்திற்கு முன்பு குறித்த பகுதியில் ஏற்பட்ட நிலம் தாழ் இறக்கம் மற்றும் குடியிருப்புகளில் ஏற்பட்ட வெடிப்புகள் தொடர்பில் அங்கிருந்து ஆறு குடும்பங்களை சேர்ந்த 23பேர் வெளியேற்றபட்டனர் அதனை தொடர்ந்து பொகவந்தலாவ ஹட்டன் பிரதான வீதி மெல்ல மெல்ல தாழ்இறங்கியமைதொடர்பில் ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதி முழுமையாக மூடப்பட்டது.
நேற்று இரவு பெய்த கடும் மழையின் காரனமாக குறித்த ஹட்டன் பொகவந்தலாவ வீதியோடு இன்று குறித்த பகுதியில் இடம் பெயர்க்கபட்ட மக்களின் நான்கு குடியிருப்பகளும் அள்ளுண்டு காசல் ரீ நீர்தேக்கத்திற்கு சென்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதனால் ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதி தொடர்ந்தும் முழுமையாக மூடப்பட்டுள்ளதோடு பொதுமக்கள் பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர் எனவே குறித்த வீதி புனர் நிர்மான நடவடிக்கை
மேற்கொள்ளும் வரை ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதி மூடபட்டு காணபடும்மெனவும் மஸ்கெலியா பொகவந்தலாவ சாமிமலை போன்ற பகுதிகளுக்கு போக்குவரத்தினை மேற்கொள்ளும் மக்கள் நோர்வூட் நகரில் இருந்து செல்லுமாறும்
பொதுமக்களுக்கு அறிவுருத்தல் வழங்கபட்டுள்ளமை குறிப்பிடதக்கது
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)