நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை தேசிய கட்டிட ஆய்வு தினைக்களத்தின் பணிப்பாளர் சமந்த போகாபிட்டிய தெரிவிப்பு
நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் சமந்தபோகாபிட்டிய தெரிவித்தார் 16.10.2018.செவ்வாய் கிழமை தேசிய கட்டிட
ஆய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் வரவழைக்கபட்டு குறித்த பகுதியை மீண்டும் பரிசோதனை மேற்கொண்ட போதே இதனை அவர் குறிப்பிட்டார்
மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியில் ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் அருகாமையில் பாரிய மண்மேடு ஒன்று சரிந்து விழும் அபாயத்திலும் மேலும் இரண்டு குடியிருப்புகள் சரிந்து விழும் அபாயம் நிலவுவதாக அவர் மேலும் தெரிவித்ததோடு குறித்த பகுதி சரிந்து விழுந்த பிறகே ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் புனரமைப்பு பணிக்கு நோர்வூட் வீதி அபிவிருத்தி
அதிகாரசபைக்கு வீதியினை புனரமைக்குமாறு அனுமதி வழங்கமுடியுமெனவும் அவர் தெரிவித்தார்.
இந்தசம்பவம் தொடர்பில் தேசிய கட்டிட ஆய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளபட்ட பரிசோதனையின் படி குறித்த பகுதி சரிந்து விழுந்ததன் பிறகு பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் நலன் கருதி ஹட்டன் பொகவந்தலாவ
பிரதான வீதியின் புணரமைப்பு பணிகள் முன்னெடுக்கபடுமென நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஆர்.டி.தேவபிரிய மேலும் குறிப்பிட்டார்.
எஸ்.சதீஸ்