நோர்வூட் பகுதியில் 6400g என் .சி போதை பொருள். 3 நபர்கள் கைது.

0
180

பாடசாலை மாணவர்களையும் தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் ஆகியோரை இலக்கு வைத்து நீண்ட காலமாக என் .சி போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த மூன்று நபர்களை நோர்வூட் பொலிஸார் கைது செய்து இன்று ஹட்டன் நீதி மன்றத்தில் குறித்த சந்தேக நபர்கள் மற்றும் போதை பொருள் ஆகியவற்றை ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

நீண்ட காலமாக போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகிசிய தகவலினையடுத்து நோர்வூட் பொலிஸ் நிலையபொறுப்பதிகாரி பேரேமலால் அவர்களின் வழிகாட்டலில் குறித்த சுற்றிவளைப்பு நேற்று (22) பகல் இடம்பெற்றுள்ளது.

இதன் போது பலசரக்கு தூள் போன்று மிகவும் சூக்சுமான முறையில் 400 கிராம் கொண்ட 16 பக்கட்டுக்களில் அடைக்கப்பட்ட 6400 கிராம் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த 400 கிராம் அடைக்கப்பட்ட பக்கட் ஒன்று சுமார் 6000 ரூபாவுக்கும் 20 கிராம் பொதி செய்த பக்கட் ஒன்று சுமார் 300 ரூபாவுக்கும் விற்பனை செய்து வருவதாகவும் குறித்த போதை பொருள் கொழும்பிலிருந்து கொண்டு வரப்படுவதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துளளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here