நோர்வூட் பகுதியில் சாரதிகள் டீசலுக்காக நான்கு நாள் வரிசையில் காதிருப்பு.

0
142

நோர்வூட் பகுதியில் சாரதிகள் டீசலுக்காக நான்கு நாட்கள் வரிசையில் காத்திருப்பதாக சாரதிகள் தெரிவி;க்கின்றனர்.
மலையக பகுதியில் உள்ள எண்ணை நிரப்பு நிலையங்களில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினையடுத்து எரிபொருள் தட்டுப்பாடு தொடர்ச்சியாக நிலவி வருகின்றன. இந்நிலையில் டிசலுக்காகவும் பெற்றோலுக்காகவும் வாகனங்களை வைத்துக்கொண்டு சாரதிகள் நீண்ட வரிசையில் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளன.

பெற்றோல் விலை அதிகரித்ததனை தொடர்ந்து பெற்றோலுக்கான வரிசை ஓரளவு குறைந்துள்ள போதிலும் டீசலுக்கான வரிசைகள் தொடர்ந்து காணப்படுகின்றன.

இந்நிலையிலேயே கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் நோர்வூட் பொகவந்தலாவை பகுதிகளை சேர்ந்த சாரதிகள் வரிசையில் நிற்பதாகவும் இன்று வரும் நாளை வரும் என்று எதிர்ப்பார்த்திருப்பதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த நான்கு நாட்களாக நோர்வூட் பகுதியில் பெற்றோல் தட்டுப்பாடு நிலவியதாகவும் பெற்றோல் இல்லாததன் காரணமாகவும்,விலையேற்றம் காரணமாகவும் பல ஆட்டோ சாரதிகள் தொழிலை கைவிட்டுள்ளதாகவும் ஒரு சில ஆட் டோ சாரதிகள் தெரிவித்தன.

எனினும் இன்றைய தினம் நோர்வூட் எண்ணை நிரப்பு நிலையத்திற்கு பெற்றோல் விநியோகம் இடம் பெற்றிருந்தமையும் குறிப்பிடத் தக்கது.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here