அட்டன் பொகவந்தலா பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் பால் பவுஸரொன்று விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்
வெயாங்கொடையிலிருந்து நோர்வூட் பால் சேகரிப்பு நிலையத்திற்கு சென்ற பவுஸர் லொறியே நேற்று 23.12.2018 காலை 06 மணியளவில் வீதியை வீட்டு விளகி குடைசாய்ந்துள்ளது
விபத்தினால் யாருக்கும் பாதிப்புகள் இல்லை என்றும் விபத்து தொடர்பில் மேலதிக விசாணைகள் தொடர்வதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம் கிருஸ்ணா