நோர்வூட்டில் விபத்து மாணவன் படுகாயம்; லொறியின் சாரதி கைது!

0
180

நோர்வூட்பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவர் மீது லொறி ஒன்று மோதியதில் பாடசாலை மாணவன் படுகாயங்களுடன் உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதோடு லொறியின் சாரதி நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர் இந்த விபத்து .வியாழகிழமை மாலை இடம் பெற்றதாக நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

பொகவந்தலாவ பகுதியில் இருந்து அட்டன் நோக்கி பயணித்த சிறிய லொறி ரக லொறி ஒன்றே மாணவன் மீது மோதியுள்ளது. வீதியை கடக்க மாணவன் முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயங்களுக்கு உள்ளான பாடசாலை சிறுவன் நோர்வூட் அலுகொல்ல பகுதியை சேர்ந்தவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்தள்ளது.

கைது செய்யபட்ட லொறியின் சாரதி 05.10.2018. அட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here