பங்களாதேஷிடமிருந்து மீண்டும் கடன் கோரியுள்ள இலங்கை !

0
141

பங்களாதேஷிடம் இருந்து மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்றத்தை இலங்கை நாடியுள்ளதாக நியூஸ் ஃபர்ஸ்ட் இன்று தெரிவித்துள்ளது.கொழும்பில் இன்று ஆரம்பமான பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான (BIMSTEC) வங்காள விரிகுடா முன்முயற்சியில் பங்கேற்பதற்காக தற்போது இலங்கை வந்துள்ள பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் ஏ.கே. அப்துல் மொமனிடம் நாணய மாற்றத்திற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் பங்களாதேஷ் வங்கி இலங்கைக்கு நீட்டிக்கப்பட்ட 200 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்றத்தின் பின்னணியில் 250 மில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்றத்திற்கான கோரிக்கை விடுக்கப்பட்டது.

பங்களாதேஷிடம் இருந்து இலங்கை மூன்று தவணைகளில் கடன் வசதியைப் பெற்றுள்ளது. அந்த வகையில் 2021 ஒகஸ்ட் 19 ஆம் திகதி நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் முதல் தவணையாக 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை பங்களாதேஷ் வங்கி வெளியிட்டது.

இரண்டாவது தவணை தொகையான 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் 2021 ஒகஸ்ட் 30 ஆம் திகதியன்று வெளியிடப்பட்டது, மேலும் 50 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள இறுதி தவணை 2021 செப்டம்பர் 21 ஆம் திகதியன்று வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here