பங்களாதேஷில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – டெஸ்ட் போட்டியும் நிறுத்தி வைப்பு

0
35

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் சக்திவாயந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி இன்று காலை 10.08 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 5.5ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொல்கத்தா, மேற்கு வங்கம் மற்றும் வழகிழக்கு இந்தியாவின் பிற பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, டாக்காவில் பங்களாதேஷ் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற டெஸ்ட் கிரிக்கெட் பேட்டியும் நிலநடுக்கம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here