பங்களாதேஷ் தலைநகர் டாக்காவின் கட்டடம் ஒன்றில் வெடிப்பு சம்பவம். 7 பேர் பலி.

0
237

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவின் மத்திய பகுதியில் உள்ள மூன்று மாடிக் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர்.

இதில் 50 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வாயு குழாய் ஒன்றில் ஏற்பட்ட கசிவே, இந்த வெடிப்பு சம்பவத்துக்கு காரணம் என சந்தேகம் எழுந்துள்ளதாக டாக்கா பெருநகர காவல்துறை துணை ஆணையாளர் ஷெய்ட் நுரல் இஸ்லாம் (Syed Nurul Islam) தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், வெடிப்புக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிவதற்கான விசாரணைகள் முன்னெக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here