பசிலை பதவி நீக்க முடியாது! – பிரதமர் மகிந்த திட்டவட்டம்

0
162

ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்களினால் கருத்துக்களுக்கு அமைய நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவை பதவி நீக்க முடியாது என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தெற்கு ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை அமைச்சர் ஒருவரை நியமிப்பதற்கும், பதவி நீக்குவதற்குமான அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட குரோதங்களை மனதில் கொண்டு அமைச்சுப் பதவிகளில் மாற்றம் செய்யுமாறு கோரி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் நிலவி வரும் நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வு காண உதவிகளை வழங்க வேண்டுமே தவிர அரசாங்கத்தை விமர்சனம் செய்வது எதிர்க்கட்சிகளின் கடமையாகாது என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here