ஆற்றில் படகொன்று கவிழ்ந்ததில் 20 பெண்கள் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் – சிந்து மாகாண எல்லையில் உள்ள இண்டஸ் ஆற்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தான் – ராஜன்பூர் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் பங்கேற்று விட்டு 100க்கும் அதிமானனோர் படகு ஒன்றில் பயணித்து கொண்டிருந்த வேளை திடீரென படகு கவிழ்ந்துள்ளது.
இதனையடுத்து, அதில் பயணித்தவர்கள் நீரினால் இழுத்துச் செல்லப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் பலரை காப்பாற்றியுள்ளனர்.
எனினும், அதில் பயணித்த 20 பெண்கள் உயிரிழந்ததாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.