திருகோணமலை கின்னியா குறிஞ்சாக்கேணி இழுவை படகு விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கும் அதில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ரமேஸ்வரன் தமது ஆந்தஅனுதாபங்களை தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அதில் தொடந்து கருத்து தெரிவிக்கையில்
நேற்றைய தினம் (23) இடம்பெற்ற இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்ததுடன் 20 பேர் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது எம் மனங்களில் நீங்காத இடம்பிடித்துள்ள ஒரு கோரா சம்பவமாக அமையப்பெருகின்றது அத்துடன்,’பல கனவுகளை சுமந்த வண்ணம் பள்ளிக்கு சென்ற அந்த பிஞ்சு குழந்தைகள்’ , மற்றும் ‘பொருளாதார நலனை நோக்கி சென்ற எம் குடும்ப உறவுகள் ‘ அனைவரும் இந்த கோரா விபத்தில் காலனின் பிடியில் சிக்கிக் கொண்டதை எண்ணி மிகவும் கவலை அடைகின்றேன்.
இந்த கோரா விபத்தில் உயிர் நீத்த எம் சொந்தங்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்து கொள்கின்றேன். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கே.சுந்தரலிங்கம்