படுதோல்வியடைந்தது இலங்கை அணி :அரையிறுதிக்கு சென்றது இந்திய அணி

0
210

இந்தியாவில் இடம்பெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி 302 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.

இந்த போட்டி இன்று பிற்பகல் 2.00 மணியளவில் வாங்கடே மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 357 ஓட்டங்களை பெற்றது.துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் சார்பில் சுப்மன் கில் அதிகபட்சமாக 92 ஓட்டங்களையும், விராட் கோலி 88 ஓட்டங்களையும், ஸ்ரேயஸ் ஐயர் 82 ஓட்டங்களையும், பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் டில்ஷான் மதுசங்க 5 விக்கெட்டுக்களையும், துஸ்மந்த சமீர 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.பதிலுக்கு, 358 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 55 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் கசுன் ராஜித்த 14 ஓட்டங்களையும், ஏஞ்சலோ மெத்தீவ்ஸ் 12 ஓட்டங்களையும் மற்றும் மகேஸ் தீக்‌ஷன 12 ஓட்டங்களையும்பெற்றுக் கொண்டனர். ஏனைய அனைத்து வீரர்களும் 10 ஐ விட குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் 5 வீரர்கள் எவ்வித ஓட்டங்களையும் பெறவில்லை.

பந்து வீச்சில் மொகமட் சிராஜ் 3 விக்கெட்டுக்களையும், மொகமட் சமி 5 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.போட்டியின் ஆட்டநாயகனாக 18 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்திய மொகமட் சமி தெரிவு செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here