தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை வழியுருத்தி பெறுந்தோட்ட தொழிலாளர்களால் முன்னெடுக்கபட்டு வந்த பணிபுரக்கனிப்பும் ஆர்பாட்டம் 09வது நாளாக 12.12.2018 புதன் கிழமையும் மேற்கொள்ளபட்டது
அந்தவகையில் நோர்வுட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா சாஞ்சிமலை மேற்பிரிவு கீழ் பிரிவு ஆகிய தோட்ட தொழிலாளர்கள் சாஞ்சிமலை பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக டயர்களை ஏறித்தும் செதுர் தேங்காய் உடைத்தும்
ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கபட்டது
இந்த ஆர்பாடத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டதோடு நாங்கள் கடந்த 09நாட்களாக பணிபுறக்கனிப்பில் ஈடுபட்டு வந்தோம் ஆனால் இன்று காலை திடீர் என இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவர் ஆறுமுகன்
தொண்டமான் பணிக்கு தொழிலாளர்களை திரும்பும் மாறும் எதிர் வரும் 19ம் திகதி நாட்டின் ஜனாதிபதியோடு கலந்துறையாட இருப்பதாக இன்று அறிக்கை விடுகிறார் எனவே இவ்வளவு நாளா ஜனாதிபதி அவர்களை ஆறுமுகன் தொண்டமானுக்கு தெரியாத எனவே ஒட்டு மொத்த தோட்ட தொழிலாளர்களையும் ஆறுமுகன் தொண்டமான் காட்டி கொடுத்துள்ளதாக
ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
எது எவ்வாறாக இருப்பினும் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆறுமுகன் தொண்டமான் கூறியவாறு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்று கொடுத்தே ஆகவேண்டும் எனவும் இம்மக்கள் கோரிக்கை விடுத்தனர் இதேவேலை 09வது நாளாகவும் பெரும்பாலான தோட்டபகுதிகளில் தொழிலாளர்கள் தொழிலுக்கு செல்லாமல் பணிபகிஷகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது இவ்வாறு இருக்க பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் கீழ்பிரிவு மத்தியபிரிவு ஆகிய தோட்ட தொழிலாளர்கள் இன்றைய தினம் பணிக்கு சென்றுள்ளமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)