பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தை கைவிட்டு தொழிலுக்கு செல்லுமாறு இ.தொ.கா.தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தொழிலாளர்களுக்கு பணிப்புரை
எதிர்வரும் 19ம் திகதி ஜனாதிபதி மூலமாக தீர்வு கிட்டும் என்கிறார் ஆறுமுகன்
பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை வழியுருத்தி கடந்த 08தினங்களாக மேற்கொள்ளபட்டு வந்த பணிபுறக்கணிப்பு போராட்டமானது 12.12.2018.செவ்வாய்கிழமை இரவு 12மணியோடு கைவிடபட்டுள்ளதாகவும்
பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை போராட்டதை கைவிட்டு மீண்டும் தொழிலுக்கு செல்லுமாறு இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இதேவேலை எதிர் வரும் 19ம் திகதி திங்கள் கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன அவர்களுக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இடையில் இடம் பெறவிருக்கின்ற கலந்துரையாடலின் போது நல்லதொரு தீர்வினை ஜனாதிபதி பெற்று கொடுப்பார் என எதிர்பார்க்கபடுவதாக ஆறுமுகன் தொண்டமான் மேலும் தெரிவித்தார்
எனவே தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை வழியுருத்தி முன்னெடுக்பட்டு வந்த பணிபகிஷ்கரிப்பு போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் வெளிநாட்டில் வாழுகின்ற எமது தமிழ் உறவுகள்
மற்றும் எமது தொழிலாளர்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கிய அனைவருக்கும் இவ்வேலை தமது நன்றியினை தெரிவித்துள்ளார்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் குழு நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை சந்தித்து தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபா வழங்கபட வேண்டும் என வழியுருத்தி மலையகத்தில் வேலை நிறுத்த போராட்டங்கள் இடம் பெற்று வருகின்றமை தொடர்பிலும் தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் விடயம்
தொடர்பில் கலந்துறையாட உள்ளதாகவும் நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினை காரணமாக குறித்த தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிடுமாறு ஜனாதிபதி மைத்திபால சிறிசேன இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களுக்கு அறிவிக்கபட்டதை அடுத்தே இந்தி தீர்மானம்
முன்னெடுக்கபட்டதாகவும் தெரிவிக்கபடுகிறது.
(பொகவந்தலாவ நிரபர் எஸ்.சதீஸ்)