இலங்கையில் பண்டிகைக் காலத்தை குறிவைத்து சில வியாபாரிகள் செயற்கை முறையில் முட்டை விலையை உயர்த்தி இருப்பதாக முட்டை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பண்டிகைக் காலத்தை இலக்கு வைத்து சந்தையில் மோசடி கும்பலொன்றும் செயற்படுவதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மாதலி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன் காரணமாக தற்போது சந்தையில் கோழி இறைச்சியின் விலை 1,400 ரூபாயைத் தாண்டியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இவ்வாறான பின்னணியில் முட்டையின் விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, 15 மில்லியன் முட்டைகளுடனான கப்பல் நேற்றிரவு (17) நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.