பண்டோரா ஆவணத்தின் நோக்கம் டயஸ்போராவின் நோக்கமாக இருக்கலாம்.

0
154

பண்டோரா ஆவணத்தின் நோக்கம் டயஸ்போராவின் நோக்கமாக இருக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் சீ.பீ. ரத்னாயக்க, இவ்விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் எனவும் கூறினார்.

கொத்மலை இறம்பொடை பகுதியில் இன்று (10.08.2021) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், பண்டோரா ஆவணம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

‘பண்டோரா ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி குழுவொன்றை அமைத்துள்ளார். அந்த குழுவின் அறிக்கை வெளிவந்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும். எவரையும் பாதுகாக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது.

பண்டோராவின் நோக்கம் டயஸ்போராவின் நோக்கமெனில் அதனையும் நாட்டுக்கு வெளிப்படுத்துவோம்.

பண்டோரா என்ற பெயரை நானும் இன்றுதான் கேள்வி படுகின்றேன். எனது கையில் வேண்டுமானால் 100 டொலர்கள் இருக்கலாம்.

அதேவேளை, உலகளவில் இரசாயன உர பயன்பாடு தவிர்க்கப்பட்டு வருகின்றது. நாமும் அந்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்.’ – என்றார்.

க.கிஷாந்தன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here