ஒரே சூழில் பிரசவமாகிய மூன்று பெண் குழந்தைகளுக்கு பால் மா வாங்க முடியாத நிலையிலுள்ள வேலு சரோஜா தனது பிள்ளைகளை வளர்த்தெடுக்க உதவிடுமாறு உறுக்கமுடன் வேண்டுகோள் விடுக்கின்றார் .
திம்புள்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிருஸ்லஸ்பாம் தோட்டத்தை சேர்ந்த ஐந்து பெண் குழந்தைகளின் தாயே இவ்வாறு ஊடகங்களினூடாக இந்த வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த ஜனவரி மாதம் 29 ம் திகதி டிக்கோயா மாவட்ட சாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு வைத்திய நிபுணர்களினால் சிசேரியன் முறையில் ஒரே சூழில் வளர்ந்த மூன்று குழந்தைகளும் பிரசவித்தனர். பிறந்த மூன்று பண்குழந்தைகளான கே.சப்ரினா.கே.சபினியா.கே.சாமினி ஆகியோரின் எடை குறைந்து காணப்பட நிலையில் கம்பளை. பேரதெனிய. அவிஸ்ஸவலை வைத்தியசாலைகளில் பராமரிக்கப்பட்டு பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அட்டன். மற்றும் கொட்டகலை பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் 11.12.வயதுடைய இரண்டு பெண் குழந்தைகளுடன் தற்போது ஒரே சூழில் பிறந்த மூன்று குழந்தைகளையும் வளர்ப்பதில் பெரும் கஸ்டத்தை எதிர்நோக்குவதாக குறித்த தாய் தெரிவித்தார்
இது தொடர்பில் 49 வயதுடைய தந்தையான வீரன் கிருஸ்னகுமார் கருத்து தெரிவிக்கையில் தான் கொழும்பில் கூழி வேலை செய்து வருவதாகவும் எனது தாய் தந்தை உட்பட மனைவி ஐந்து பிள்ளைகளுடன் வருமையின் கீழ் வாழ்ந்து வருகின்றோம்.
மூன்று குழந்தைகளுக்கும் தாய் பால் வழங்க முடியாத நிலையில் வைத்தியரின் ஆலோசனைக்கமைய பால் மா வழங்கிவருவதாகவும் வருமையின்நிமித்தம் பால் மா வாங்க முடியாத நிலையிலுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் தோட்ட தொழிலாளியான தாய் வேலு சரோஜா வருமையின் மத்தியிலும் எனது பிள்ளைகளை வளத்தெடுப்பேன் என தெரிவித்ததுடன் எமக்கு உதவ விரும்பும் நிறுவனங்கள் மற்றும் தனவந்தகர்களிடம் உதவிகள் கிடைக்கப்பெற்றால் மகிழ்வோடு பெற்றுகொள்வோம். என்றார் பச்சிளம் குழந்தைகளுக்கு பால் கொடுக்க முடியாது தவிக்கும் தாயின் மடியில் தவழ்ந்த குழந்தைகள் சிரித்தவண்ணம் இருந்தமை எமது கமராக்கள் பதிவு செய்தது.
தொடர்புகளுக்கு வீரன் கிருஸ்னகுமார் கிருஸ்லஸ்பாம் கொட்டகலை 0772191462
உதவ விரும்பும் நல்வுள்ளங்கள் முன்வரவேண்டும் என வேண்டுகின்றோம்…….
மு.இராமச்சந்திரன்