பப்பாளி சாப்பிட்டதும் இதனை மட்டும் செய்யாதீர்கள்

0
107

பொதுவாகவே பப்பாளி பழம் வெப்ப மண்டல நாடுகளை பொருத்த வரையில் இலகுவாகவும் மழிவாகவும் பெற்றுக்கொள்ளக் கூடிய பழங்களில் ஒன்று இது உடலுக்கு பல ஆராக்கியத்துக்கும் சர்ம பொலிவுக்கும் அலப்பரிய நன்மைகளை தரக்கூடியது.பப்பாளி பழத்தை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதனால் செறிமான கோளாறுகள் மற்றும் மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வை கொடுக்கும். ஆனால் பப்பாளி பழத்தை சாப்பிட உடன் சாப்பிடக்கூடாத சில உணவுகள் உள்ளன.

பப்பாளி பழம் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் அதே வேளை குறித்த சில உணவுகளுடன் சேர்த்து உண்ணும் போது பாதக விளைவை ஏற்படுத்துகின்றது.இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

பப்பாளி சாப்பிட்ட பின்னர்…

பப்பாளி சாப்பிட்ட பின்னர் வெள்ளரி சாப்பிடுவது உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் வெள்ளரிக்காயில் அதிக நீர்ச்சத்து காணப்படுவதால் இது வாய்வு, வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பாதக விளைவை கொடுக்கும்.

பப்பாளி சாப்பிட்ட பிறகு உடனேயே முட்டை சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் . இது அஜீரணம், மலச்சிக்கல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் தக்காளி என இவை அனைத்தும் அமிலத்தன்மை அதிகம் நிறைந்த உணவுகள் பப்பாளி சாப்பிட்ட பிறகு அமிலத்தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடக்கூடாது.இது நெஞ்செரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனைகளை தோற்றுவிக்கும்.

பால், தயிர், பாலாடைக்கட்டி, வெண்ணெய் போன்றவற்றுடன் பப்பாளி பழத்தை சேர்த்து உண்ணக் கூடாது. பப்பாளியில் உள்ள என்சைம்கள் பால் பொருட்கள் செறிமானமாவதை கடினமாக்கிவிடும் பப்பாளி செரிமானத்தை சீர்செய்யும் தன்மை கொண்டது தான் ஆனால், பப்பாளி பழத்தை சாப்பிட்ட பிறகு ஏதேனும் பால் பொருட்களை எடுத்துக் கொண்டால், அது செரிமான அமைப்பை பாதிக்கிறது.

மேலும் பப்பாளி சாப்பிட்ட உடனேயே குளிர்ந்த நீரை பருகுவது பல செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும். அதோடு வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது. அதனால் அசௌகரியமா நிலை உருவாகும். அப்படியும் பப்பாளி சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் வெதுவெதுப்பான நீரை எடுத்துக்கொள்வது சிறந்தது.

ஆராக்கியம் நிறைந்த பப்பாளி பழத்தின் முழுமையாக பலனை பெற வேண்டுமாயின் மேற்குறிப்பிட்ட உணவுகளும் சேர்த்து உண்பதை தவிர்த்துக்கொள்வது நன்மை பயக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here