அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்குமாறுகோரியும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியும் ராகலை நகரில் நேற்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்க மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போராட்டத்துக்கு மக்களும் ஆதரவு வழங்கினர்.
கறுப்பு கொடிகளை ஏந்தி, பதாதைகளையும் தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அரசின் நியாயமற்ற வரிவிதிப்பு கொள்கைக்கும் எதிர்ப்பை வெளியிட்டனர்.
” அரசு அநாவசியமான செலவுகளை குறைக்க வேண்டும், அடக்குமுறைகளை நிறுத்த வேண்டும்.” எனவும் போராட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.
(அந்துவன்)